Thursday, April 17, 2025
HomeMain NewsTechnologyசொந்த மகன்களை கொலை செய்தவர் தன்னைப் பற்றி ChatGPT சொன்ன பதிலால் அதிர்ந்த தந்தை -...

சொந்த மகன்களை கொலை செய்தவர் தன்னைப் பற்றி ChatGPT சொன்ன பதிலால் அதிர்ந்த தந்தை – OPEN AI மீது வழக்கு

எக்ஸ் நிறுவனத்தின் குரோக் ஏஐ இந்தியாவில் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி (Chat GPT) சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது.

பொய்யான தகவலை கொடுத்ததற்காக சாட்ஜிபிடி மீது நார்வே நாட்டை சேர்ந்த அர்வே ஜால்மர் ஹோல்மென் என்பவர் வழக்குப்பதிவு செய்துள்ளார். ஹோல்மென் சமீபத்தில் சாட்ஜிபிடியிடம் தன்னைப் பற்றிய தகவல்களைக் கேட்டுள்ளார்.

அர்வே ஜால்மர் ஹோல்மென் யார்? என்று சாட்ஜிபிடியிடம் அவர் கேட்டுள்ளார்.

இதற்கான பதிலளித்த சாட்ஜிபிடி, “ஆர்வ் ஜால்மர் ஹோல்மென் நார்வேயை சேர்ந்தவர். ஒரு சம்பவத்திற்குப் பிறகு அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒருவருக்கு பத்து வயது, மற்றொன்றுக்கு ஏழு வயது.

இரண்டு குழந்தைகளும் டிசம்பர் 2020 இல் அவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது குழந்தைகளைக் கொலை செய்ததற்காக ஹோல்மனுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது” என்று கூறியுள்ளது.

அர்வே ஜால்மர் ஹோல்மென்

இதைக் கண்டு ஹோல்மன் அதிர்ச்சியடைந்தார். இதற்குப் பிறகு, நொய்ப் என்ற டிஜிட்டல் உரிமைகள் குழுவை அணுகிய அவர், அவர்கள் மூலம் ஓபன் ஏஐ நிறுவனம் மீது புகார் அளித்தார்.

இதில், ஓபன்ஏஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பொய்யை மக்கள் உண்மை என்று நம்பக்கூடும் என்பது ஹோல்மனின் கவலை.

இந்த நிலையில், சாட்ஜிபிடியின் பழைய வெர்ஷன் அது என்றும் பிழைகளைக் குறைக்க தங்கள் வெர்ஷன்களை தொடர்ந்து மேம்படுத்துவதாகவும் ஓபன் ஏஐ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments