மேற்கு லண்டன் பகுதியில் குழந்தையின் உடல் ஒன்று சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு லண்டன், நாட்டிங் ஹில் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு அருகே ஒரு பையில் பிறந்த குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் தாயை உடனடியாக கண்டுபிடித்து, அவரது உடல் நலத்தை உறுதி செய்ய பெருநகர காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை மதியம் 12:46 மணிக்கு டால்போட் சாலை மற்றும் போவிஸ் கார்டன்ஸ் சந்திப்பில் இருந்து சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட பொலிஸார் மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினர், குழந்தையின் உடலை மீட்டனர்.
இருப்பினும், குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
குழந்தையின் பாலினம் மற்றும் சரியான வயது இன்னும் கண்டறியப்படவில்லை.
இது தொடர்பான விசாரணையை பொலிஸார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.