தென்கொரியாவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கையர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தென்கொரியாவில் உள்ள இலங்கை தூதரகம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
அத்துடன், குறித்த தீப்பரவலில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என அந்த தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதேநேரம், அவசர சந்தர்ப்பங்களில் அங்குள்ள இலங்கையர்கள் (1082-2) 735 29667 அல்லது (1082-2) 794 2968 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பை ஏற்படுத்த முடியும் என தென்கொரியாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.