கலவானை திசையிலிருந்து பதுரலிய நோக்கி இறப்பர் பாலை ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று, கொடிப்பிலிகந்த சமன் தேவாலயத்திற்கு அருகில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்தனர்.
நேற்று (26) நள்ளிரவு 12.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த மற்றொருவர் கலவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் புளத்சிங்கள பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றின் இரண்டு ஊழியர்கள் என்றும், அவர்கள் புளத்சிங்கள மற்றும் ரம்புக்கனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதிக வளைவு கொண்ட பகுதியில் பவுசர் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் வழுக்கிச் சென்று விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கலவானை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த விபத்து குறித்து கலவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.