பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் குரங்கு, மயில் மற்றும் மர அணில் ஆகியன தொடர்பில் கடந்த 15 ஆம் திகதி நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் வைத்து விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்துள்ளார்
அவ்வாறு கிடைக்கப்பெறும் அறிக்கை முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட அறிக்கையாகக் கருத்திற்கொள்ளப்படமாட்டாது.
இது குறித்த கணக்கெடுப்புகள் மீண்டும் நடத்தப்படும்.
வனஜீவராசிகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமாயின் வனஜீவராசிகள் தொடர்பான உரிய கணக்கெடுப்புகள் அவசியம் எனவும் விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.