Tuesday, April 8, 2025
HomeMain NewsTechnology42 நாடுகளின் ஒரே தெரிவில் ஐரோப்பாவில் அதிகம் விற்பனையான கார் எது தெரியுமா..!

42 நாடுகளின் ஒரே தெரிவில் ஐரோப்பாவில் அதிகம் விற்பனையான கார் எது தெரியுமா..!

ஐரோப்பாவின் 42 நாடுகளில் ஒரே கார் மிக அதிகமாக விற்பனையாகியுள்ளது.

2024-ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் (Europe) அதிகம் விற்பனையான கார்களை பற்றிய ஆய்வு முடிவுகளை Car Industry Analysis வெளியிட்டுள்ளது.

விலை உயர்வுகள், உற்பத்தி செலவுகள் மற்றும் பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும், 42 நாடுகளில் ஒரே மொடல் காரை அதிகம் விற்பனை ஆனது என்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.

Dacia Sandero – 2024-ன் நம்பர் 1 கார்

2024-ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் மிகவும் அதிகமாக விற்பனையான கார் டாசியா சாண்டரோ (Dacia Sandero) ஆகும்.

கடந்த ஆண்டு முழுவதும், 2,86,663 டாசியா சாண்டரோ கார்கள் விற்பனையாகியுள்ளன.

இந்த கார் ஐந்து கதவுகளுடன் வரும் காம்பாக்ட் ஹேட்ச்பேக் மொடல் ஆகும்.

பிரித்தானியாவில் கிடைக்கும் மிகக்குறைந்த விலையிலான கார் இது. இதன் ஆரம்ப விலை £14,200 பவுண்டு மட்டுமே, இது பல பிரபலமான பிராண்டுகளின் கார்களை விட 5,000 பவுண்டு குறைவாக உள்ளது.

குறைந்த விலையிலான டாசியா சாண்டரோ வாகனம் அதிக வசதிகளை வழங்காது. ஆனால், விரிவான உள்தளம் மற்றும் வசதியான பயண அனுபவம் காரணமாக, இது அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.

இரண்டாவது இடத்தில் Renault Clio

2024-ல் 269,436 கார்கள் விற்பனையாகி, Renault Clio இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

டாசியா சாண்டரோவின் அதே தளத்தை (Platform) பகிர்ந்து கொள்ளும் கிளியோ, பிரெஞ்ச் ஸ்டைல் மற்றும் விலாசமான இன்டீரியர் ஆகியவற்றினால் பிரபலமாகியுள்ளது.

இக்கார் 1990-ஆம் ஆண்டு அறிமுகமான முதல் மொடலுடன் ஒப்பிடும்போது, இன்டீரியர் பெரிதாக, 391-லிட்டர் boot space-உடன் வருகிறது. இது அதன் வகையில் மிகப்பெரிய சேமிப்பிடத்தைக் கொண்ட காராகும்.

2024-ஆம் ஆண்டில், புதிய கார்களின் விற்பனை விலை உயர்ந்திருந்தபோதிலும், குறைந்த விலை, எளிமையான வடிவமைப்பு, மற்றும் பயனுள்ள அம்சங்கள் கொண்ட கார்களுக்கு தான் அதிக ஈர்ப்பு இருந்தது என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments