Wednesday, April 9, 2025
HomeHealthயூரிக் ஆசிட் லெவலை சீராக வைத்திருக்க உதவும் 5 டிப்ஸ்...!

யூரிக் ஆசிட் லெவலை சீராக வைத்திருக்க உதவும் 5 டிப்ஸ்…!

நமது உடலில் யூரிக் ஆசிட் லெவலை சீராக வைத்திருக்க இந்த 5 காலை பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

சில உணவுகள் மற்றும் பானங்களில் பியூரின்கள் மற்றும் சேர்மங்கள் காணப்படுகிறது. இதனை நாம் சாப்பிட்ட பின்பு, உடல் அதனை உடைக்கும்போது யூரிக் ஆசிட் உற்பத்தியாகிறது. இது ஒரு கழிவு பொருளாகும்.

இந்த கழிவை நமது சிறுநீரகங்கள் வடிகட்டி சிறுநீர் வழியாக வெளியே அனுப்புகிறது. இதில், உடலில் உற்பத்தியாகும் யூரிக் ஆசிட்டின் அளவு சமநிலையற்றதாகி அதிகரித்தால் ஹைப்பர்யூரிசிமியா என்ற பிரச்சினை வரும்.

ரத்தத்தில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாவதன் பெயர் தான் ஹைப்பர்யூரிசிமியா ஆகும். இதனால் ஆர்த்ரைட்டிஸ், மூட்டு வலி மற்றும் கீல்வாதம் ஆகிய நோய்கள் உண்டாகும்.

இப்போது நாம் யூரிக் ஆசிட் லெவலை சீராக வைத்திருக்க உதவும் காலை பழக்கங்களை பற்றி பார்க்கலாம்.

1. எலுமிச்சை நீர்

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட் காரத்தன்மை விளைவை ஏற்படுத்துகிறது. இது, உடலில் இருக்கும் அமிலத்தன்மையை நடுநிலையாக்குகிறது.

எலுமிச்சையை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் மூட்டுகளில் யூரிக் ஆசிட் கிரிஸ்டல்கள் உருவாவதை தடுக்கலாம்.

மேலும், எலுமிச்சை தண்ணீரில் ஒரு சிட்டிகை கருப்பு உப்பு மற்றும் சில துளி இஞ்சி சாறு சேர்க்கலாம். இப்படி குடித்தால் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்தும்.

2. குறைந்த அளவு காபி

காலையில் நாம் குறைந்த அளவு காபியை குடிப்பதன் மூலம் சீரம் யூரிக் ஆசிட் அளவைக் குறைக்கிறது. இதில் உள்ள காஃபின், பியூரின்களை உடைக்கும் நொதிகளுடன் போட்டியிடுகிறது. இது யூரிக் அமில உற்பத்தியை குறைக்கிறது.

ஒரு நாளைக்கு 1 அல்லது 2 கப் பிளாக் காபி குடிக்காலம். அதற்கு அதிகமாக குடித்தால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

3.தண்ணீர்

அதிக அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் யூரிக் ஆசிட் லெவல் கட்டுக்குள் இருக்கும். நமது உடலில் உள்ள 70 சதவீத யூரிக் அமிலத்தை சிறுநீரகங்கள் வடிகட்டுகின்றன. எனவே சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது முக்கியம்.

4. புல்லில் நடப்பது

காலணி எதுவும் அணியாமல் புல்லில் நடப்பதன் மூலம் இயற்கையான முறையில் யூரிக் ஆசிட் லெவலை கட்டுப்படுத்தலாம்.

அதாவது, கால்களில் உள்ள அக்குபிரஷர் புள்ளிகள் சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

5. ஃபைபர் சத்து

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தலாம்.

இதன் மூலம் யூரிக் ஆசிட் அளவு குறைகிறது. சியா விதைகள், ஓட்ஸ், ஸ்மூத்திகள், காய்கறிகள் மற்றும் பழங்களில் நார்ச்சத்து அதிகமாக உள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments