Monday, April 28, 2025
HomeMain NewsIndiaமோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் இந்தியாவின் அறிவிப்பு

மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் இந்தியாவின் அறிவிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை குறித்து இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை பயணிப்பார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, ​​இந்தியப் பிரதமர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் தங்கியிருக்கும் போது, இந்தியப் பிரதமர் அனுராதபுரத்திற்குச் சென்று புனித ஶ்ரீ மகா போதியை வழிபடவுள்ளதுடன், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படும் பல திட்டங்களையும் தொடங்கி வைப்பார்.

இவ்விஜயத்தின் போது இரு நாடுகளுக்கு இடையே கைச்சாத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாற்றிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பிரதமரின் இந்த விஜயத்தின் போது இந்திய வௌிவிவகார அமைச்சருடன் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வௌிவிவகார செயலாளர் மற்றும் இந்திய அரசாங்கத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments