ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் “விரைவில் இறந்து விடுவார்” என யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கீ உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே யுக்ரேன் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
கீவ் படைகள் ரஷ்யாவின் பல பகுதிகளைத் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றன.
ரஷ்ய ஜனாதிபதியின் உடல்நிலையைக் குறித்து யுக்ரேன் ஜனாதிபதி கடுமையாக விமர்சித்ததுடன், புடினின் உடல் நிலை நீண்ட நாட்களாக மோசமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் புடின் இரண்டு வாரங்களுக்கு பொது இடங்களில் தோன்றவில்லை, இதனால் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட காணொளிகளை வெளியிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதேவேளை, அவரின் உடல்நிலை மோசமான நிலைக்குச் சென்றிருக்கலாம் என்ற செய்திகளும் வலுப்பெற்றுள்ளன.
2014, 2020, மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பலமுறை அவருக்குப் புற்றுநோய் இருப்பதாகக் கூறப்பட்டது.
அவசர மருத்துவ உதவிக்காக அவருடன் எப்போதும் மருத்துவர்கள் குழுவொன்று பயணிக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விரைவில் இறந்து விடுவார் என யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கீ உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச ஊடகங்களுக்குத் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.