தொடுவாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாமடுவெல்ல கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (28) மாலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சடலம் மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தொடுவாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.