அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் சியாட்டல் நகரின் டகோமா பகுதியிலுள்ள வீட்டில் நேற்று, இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க நேரப்படி, இரவு 12 மணியளவில் நடைபெற்ற கேளிக்கை நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், திடீரென அங்கிருந்தவர்கள் மீது சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.