மெட்டா நிறுவனம் வட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பாடல்கள் வைத்துக்கொள்ளும் வகையில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தும் வட்ஸ் அப் சமூக வலைத்தளம் தனது பயனர்களுக்காக புது புது அப்டேட்களை செய்து கொண்டு வருகிறது.
வீடியோ, ஓடியோ கோல்ஸ், க்ரூப் வீடியோ கோல் என ஏராளமான வசதிகளைத் தந்த வட்ஸப் நிறுவனம் இன்ஸ்டாகிராம் போன்று வட்ஸ்-அப் ஸ்டேட்டசிலும் பாடல்களைப் பதிவிடும் வகையில் புதிய அப்டேட்டை தந்துள்ளது.
இந்த புதிய அப்டேட் வட்ஸ் அப் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரட்ஸ் ஆகிய மூன்று சமூக வலைத்தளங்களையும் வாட்ஸ்அப்பில் இருந்தபடியே இயக்கும் அப்டேட் வெளியானமை குறிப்பிடத்தக்கது.