Monday, April 7, 2025
HomeMain NewsMiddle East50 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட ஹமாஸ்!

50 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட ஹமாஸ்!

இஸ்ரேல் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஹமாஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

மேலும், ஐந்து பணயக் கைதிகளை விடுவிப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்து இருக்கிறது.

இந்த முறை சரியாக 50 நாட்கள் போர் நிறுத்தம் அமலில் இருக்கும்.

ரமலான் முடிவை குறிக்கும் ஈத், சனிக்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை முடிவடைகிறது.

ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹயா, ஒரு தொலைக்காட்சி அறிக்கையின் போது, குழுவின் “நேர்மறையான” பதிலையும் அதைத் தொடர்ந்து இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டதையும் உறுதிப்படுத்தினார் என சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் ஆரம்ப போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை “முழுமையாகக் கடைப்பிடித்துள்ளது” என்றும், இஸ்ரேல் “இந்த திட்டத்தைத் தடுக்காது” என்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் அல்-ஹயா கூறினார்.

எகிப்து அறிவித்த போர் நிறுத்த ஒபந்தத்திற்கு இஸ்ரேல் ஒரு எதிர் திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.

மத்தியஸ்தர்களிடமிருந்து பெறப்பட்ட திட்டத்தைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேற்று தொடர் ஆலோசனைகளை நடத்தினார்.

இதன் பிறகு, இஸ்ரேல் தனது எதிர் திட்டத்தை அமெரிக்காவுடன் முழு ஒருங்கிணைப்புடன் மத்தியஸ்தர்களுக்கு வழங்கியுள்ளது,” என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கூறியது.

இஸ்ரேல் தரப்பில் வழங்கப்பட்டுள்ள எதிர் திட்ட விவரங்கள் பற்றிய தகவல்கள் இல்லை.

காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியது.

மேலும் இம்மாத தொடக்கத்தில் முழுமையான மனிதாபிமான உதவிகள் செல்வதை தடுத்து நிறுத்தியது.

இதுதவிர மீதமுள்ள 24 பணயக்கைதிகள் உயிருடன் இருப்பதாக நம்பப்படும் வரை அல்லது விடுவிக்கப்படும் வரை தனது படைகள் காசாவின் சில பகுதிகளில் நிரந்தரமாக இருக்கும் என்று கூறியது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments