Monday, April 7, 2025
HomeMain NewsAmericaகேளிக்கை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

கேளிக்கை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் அமைந்துள்ள சியாட்டில் நகரின் டகோமா பகுதியில் உள்ள வீட்டில் இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், இரவு 12 மணியளவில் (உள்நாட்டு நேரப்படி) கேளிக்கை நிகழ்ச்சி நடந்தபோது திடீரென அங்கிருந்தவர்கள் மீது ஒரு சிறுவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவனை கைதுசெய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

USA,shooting, Death

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments