பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை தொலைபேசியில் தொடர்புகொண்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், மன்னர் சார்லஸ் நலம்பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள விடயம் அனவரும் அறிந்ததே.
இந்நிலையில், புற்றுநோய் சிகிச்சையால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் தொடர்பில் மருத்துவர்களின் கண்காணிப்புக்காக சமீபத்தில் மன்னர் சார்லஸ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விடயம் ராஜ குடும்பத்தினருக்கும், மன்னரின் நலம் விரும்பிகளுக்கும் கவலையை உருவாக்கியுள்ளது.
அதாவது, இன்னமும் மன்னர் புற்றுநோய் தொடர்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் என்றால், அவர் முழுமையாக புற்றுநோயிலிருந்து விடுபடவில்லை என்றுதானே அர்த்தம் என்னும் ரீதியில் கருத்துக்கள் நிலவி வருகின்றன.
இந்நிலையில்தான், மன்னர் நலம் பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை தொலைபேசியில் தொடர்புகொண்ட ட்ரம்ப், மன்னர் நல்ல ஆரோக்கியம் பெற தான் வாழ்த்துவதாக தெரிவித்துக் கொண்டதாக, பிரதமர் இல்ல செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.