ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் ஹூடாவிற்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் சி.எஸ்.கே. அணியில் இடம்பிடித்தார். இதன்மூலம் நீண்ட இடைவெளிக்கு பின் சி.எஸ்.கே. அணிக்கு திரும்பிய வீரர் என்ற அஸ்வினின் சாதனையை (3,591 Days) விஜய் சங்கர் (3,974 Days) முறியடித்தார்
2014ல் முதல் முறையாக சென்னை அணிக்காக விளையாடிய நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் விஜய் சங்கர் களம் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.