புதுச்சேரியில், Providence Mall-ல் உள்ள பிரபல மெக்டொனால்டு உணவகத்தில், ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய பர்கரில், வேகாத பச்சை கோழிக்கறி இருந்ததை அறியாமல் சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டதாக குற்றம்சாட்டிய வாடிக்கையாளர், ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார்.
மெக்டொனால்டு ஊழியர்கள் தங்கள் மீதான தவறை ஒப்புக்கொண்டதாக கூறிய அந்த வாடிக்கையாளர், ஆன்லைனில், உணவு பாதுகாப்புத்துறையிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.