ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் மீது ஏகே ரசிகர்களின் கவனம் அதிகம் இருக்கிறத். இதுவரை படத்திலிருந்து வெளியான இரண்டு சிங்கிள்கள் மற்றும் டீசர் பட்டையை கிளப்பி நல்ல ரெஸ்பான்ஸை பெற்றன. இரண்டாவது சிங்கிள் லிரிக்கல் வீடியோவில் அஜித்தின் நடனமும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. படமானது இந்த மாதம் பத்தாம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் படத்தின் டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விடாமுயற்சி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அஜித்குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க கமிட்டானார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். ஆதிக் கடைசியாக இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் சக்கைப்போடு போட்டு 100 கோடி ரூபாய் வசூலித்தது. எனவே அஜித்தை வைத்து எந்த மாதிரியான ஒரு சம்பவத்தை செய்ய காத்திருக்கிறார் என்ற ஆவல் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டபோதே ஏகே ரசிகர்களிடம் இருந்தது.
அவர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக அஜித்தின் லுக் அமைந்திருந்தது. உடல் எடையை முழுவதுமாக குறைத்து படு ஸ்லிம்மாக அஜித் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அந்த லுக்குகளை பார்த்த ரசிகர்களோ கண்டிப்பாக இந்தப் படத்தில் வின்டேஜ் அஜித்தை பார்க்கலாம்; முக்கியமாக விடாமுயற்சியில் விட்டதை குட் பேட் அக்லியில் பிடித்து பயங்கரமாக மாஸ் காண்பிக்கலாம் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. அதிலும் ஆதிக் தரமான ஃபேன் பாய் சம்பவத்தை செய்துவிட்டார் என்றே ஏகே ஃபேன்ஸ் கூறினார்கள். பழைய அஜித் படங்களின் ரெஃபரன்ஸ்கள் எல்லாம் அந்த டீசரில் இடம்பெற்றிருந்தன. அதனைத் தொடர்ந்து படத்திலிருந்து இரண்டு சிங்கிள்கள் வெளியாகின. சமீபத்தில் வெளியான காட் பிளஸ் யூ என்ற சிங்கிள் லிரிக்கல் வீடியோவில் அஜித் நடனமும் ஆடியிருந்தார். அவரது நடனத்துக்கு ரசிகர்கள் தங்களது வரவேற்பையே கொடுத்தார்கள்.
டீசர், சிங்கிள்களை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் ஆதிக் தரமான ஒரு படத்தை கொடுத்துவிடுவார் என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் ஆதிக் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில் அவர் தன்னுடைய அடுத்த படமும் அஜித்தை வைத்துதான் இயக்கப்போகிறேன் என்று சொல்லி அடுத்த சர்ப்ரைஸை கொடுத்தார்.
பொதுவாக ஒரு இயக்குநரின் ஒர்க்கிங் ஸ்டைலும், அவரது திறமையும் ஏகேவுக்கு பிடித்திருந்தால்தான் வரிசையாக வாய்ப்புகள் கொடுப்பார். இப்போது அந்த லிஸ்ட்டில் ஆதிக்கும் இடம்பெற்றுவிட்டதால் ஏகேவின் குட் புக்கில் அவரும் இருக்கிறார்.
படமானது ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் மிகவிரைவில் படத்தின் ட்ரெய்லரை எதிர்பார்க்கலாம். இந்நிலையில் குட் பேட் அக்லி படத்துக்கான டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்குகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி, ஏப்ரல் நான்காம் தேதி இரவு டிக்கெட் புக்கிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அன்றைய தேதிக்கு அஜித் ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.