நடிகர் சூர்யாவின் 44வது படம் ரெட்ரோ. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் முடிந்ததை, Ghibli ஸ்டைலில் அப்டேட் கொடுத்து அசத்தி உள்ளார்கள். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த படத்தின் இரண்டு பாடல்களும் டீசரும் ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் குறிப்பாக, கனிமா பாடல் இணையவாசிகள் மத்தியில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. படம் வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால் படத்தின் புரோமோசன் பணிகள் இன்னும் முழு மூச்சாக தொடங்கப்படவில்லை என்றாலும், ரசிகர்களுக்கு அவ்வப்போது ஏதாவது அப்டேட் கொடுத்துக் கொண்டுதான் உள்ளார்கள்.
இப்படியான நிலையில் ரெட்ரோ படத்தின் டப்பிங் குறித்த அப்டேட் படக்குழு சார்பில் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அப்டேட்டில் படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், சூர்யாவும் அவருடன் இருக்கிறார்.
அதில் சூர்யா பேசும்போது, ” ரெட்ரோ டப்பிங் முடுஞ்சுது கட் அண்ட் ரைட்டு” என பேசுகிறார். அதற்கு பின்னர் டப்பிங்கின் போது சூர்யாவுக்கு அருகில் கார்த்திக் சுப்புராஜ் நின்று கொண்டு இருக்கிறார். இருவரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான நிலையில் இருவரும் சிரித்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை Ghibli ஸ்டைலில் மாற்றி செம அப்டேட்டான அப்டேட் கொடுத்துள்ளார்கள்.