வடகொரியா உருவாக்கி உள்ள புதிய போர்க்கப்பல் ஏராளமான ஏவுகணைகளை தாங்கி செல்லும் வல்லமை கொண்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சோங்ஜின் மற்றும் நம்போ கப்பல் கட்டும் தளங்களில் கட்டப்பட்ட 4000 டன் எடை கொண்ட பெயரிடப்படாத கப்பலை, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வடகொரியா கடற்பயணத்தில் ஈடுபடுத்தியது.
அமெரிக்காவின் ஆர்லீ பர்க் நாசகாரி கப்பலின் அளவில் பாதியை கொண்டுள்ள வடகொரிய கப்பலில் இருந்து செங்குத்தாக ஏவுகணைகளை ஏவும் அமைப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.