2040ம் ஆண்டுக்குள் முதல் இந்திய விண்வெளி வீரரை சந்திரனுக்கு அழைத்து செல்லும் “மூன் மிஷன்” திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், NGLV என பெயரிடப்பட்டுள்ள
பெரிய ராக்கெட்டுகளை வடிவமைத்து தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.