தமிழ் சினிமா மட்டும் இல்லாமல், இந்தியாவில் பெண்களை பாலியல் ரீதியாக அணுகாத ஆண்களே இல்லாத சினிமா உலகம் என எதுவுமே இல்லை போல என யோசிக்க வைக்கிறது மும்பை வட்டாரத்தில் நடைபெற்ற சம்பவம். இப்போதுதான் தமிழ் சின்னத்திரையில் ஒரு நடிகையை ஆடிஷனில் ஒருவர் ஆடை இல்லாமல் நிற்கச்சொல்லி வெளியான வீடியோ அதிர்ச்சியை கிளப்பியது. இந்நிலையில், பலரும் அதிர்ந்து போகும் வகையில் ஒரு சம்பவம் மும்பை திரையுலகில் நடைபெற்றுள்ளது.
இணையம் வளர்ந்த பின்னர், பலரும் தங்களது திறமைகளை வெளிக்காட்டி, இன்றைக்கு முன்னேறிக்கொண்டு உள்ளார்கள். இணைய வளர்ச்சியால் பலன் பெற்றவர்கள் இந்தியாவில் கோடிக்கணக்கில் உள்ளார்கள். இப்படியான நிலையில் இணையத்தையும் சமூக வலைதளத்தையும் அடிப்படையாகக் கொண்டு சினிமா பிரபலங்களை போல், சோசியல் மீடியா செலிபிரிட்டிகள் உருவாகியுள்ளார்கள். இதில் சர்ச்சை, ஆபாச பேச்சு போன்றவற்றை மட்டும் பேசி, இணையத்தில் டிரெண்ட் ஆனவர்கள் பலர் உள்ளார்கள். அதற்கு தமிழ்நாட்டில் ஒரு தனி பட்டியல் போடலாம்.
இப்படியான நிலையில் பாலிவுட் இயக்குநர் ஒருவர் சமூக வலைதளத்தில் பிரபலமாக இருந்த ஒரு பெண்ணின் தொலைபேசி எண்ணை எப்படியோ வாங்கிவிட்டார். முதலில் அந்த பெண்ணைக் கூப்பிட்டு பேசிய இயக்குநர், அந்த பெண்ணை ஆடிஷனுக்கு வர சொல்லியுள்ளார். அந்த பெண்ணும் சென்றுள்ளார். அதன் பின்னர் நடிகையை எப்போதும் டச்சில் இருக்கும்படி கூறிவிட்டு, இவரே அடிக்கடி மெசேஜ் அனுப்புவது, போன் செய்வது என இருந்துள்ளார். மேலும் படத்தில் உன்னை நடிகையாக தேர்வு செய்துவிட்டதாக கூறியும் உள்ளார். அந்த பெண்ணும் மகிழ்ச்சியில் இருந்துள்ளார்.
இப்படியான நிலையில் ஒரு நாள், பெண்ணை ஒரு ரயில் நிலையத்திற்கு வர சொல்லியுள்ளார். அந்த பெண்ணோ வர மறுத்துள்ளார். நான் போதையில் இருக்கிறேன், நீ வரவில்லை என்றால் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து விடுவேன் எனத் தெரிவித்துள்ளார். இதனால் பயந்த அந்த பெண் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். தன்னை அருகில் இருக்கும் ரெசாட்டில் தங்க வைத்துவிட்டு போய்விடு எனக் கூறியுள்ளார்.
இந்த பேச்சை நம்பிய பெண்ணும் அவரை ரெசார்ட்டில் தங்க வைக்கச் சென்றுள்ளார். அறையில் விட்டுவிட்டுச் சென்று விடலாம் என நினைத்த அந்த பெண்ணை, அறையிலேயே மடக்கிப் பிடித்து, அத்து மீறியுள்ளார். கத்தினால் மானமே போய்விடும் என நினைத்த அந்த சோசியல் மீடியா பிரபலம், இயக்குநரின் காமவெறிக்கு இரையாகிய உள்ளார்.
போதை தெளிந்த பின்னர், நீ அழுக வேண்டாம், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி, அந்த டிக் டாக் பிரபலத்தை மேலும் மேலும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலத்திற்கு அந்த பெண்ணுடன் சுற்றிக் கொண்டிருந்த அந்த இயக்குநர், தயாரிப்பாளருக்கும் எனக்கும் இடையில் பிரச்னை, படம் டிராப் எனக் கூறி, அந்த பெண்ணை கழட்டிவிட்டுள்ளார்.
இதற்கிடையில் அந்த பெண் கிட்டத்தட்ட மூன்று முறை கருக்கலைப்பு செய்துள்ளாராம். இப்போது அந்த இயக்குநர் வேறு ஒரு பெண்ணுடன் சுற்றிக் கொண்டிருந்த விஷயத்தைத் தெரிந்து கொண்ட அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவலர்களோ, இயக்குநரைப் பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். 10 படங்களை பாலிவுட்டில் இயக்கிய இயக்குநர் பார்க்கும் வேலையா இது என விவரம் தெரிந்தவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.