உக்ரைன் மீதான போரை நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ரஷ்ய – உக்ரைன் போர் அர்த்தமற்ற போர் என்றும், அதை நிறுத்துவதற்கான அனைத்துவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
போரில் சராசரியாக வாரம்தோறும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும், அவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றாலும், அவர்களும் மனிதர்கள்தான் என்றும் அவர் தெரிவித்தார்.