அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மற்றும் மெக்சிகோவின் ச்சிவாவா எல்லையில், கண்காணிப்புப் பணிகளுக்கு அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் குதிரைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
பல்வேறு நிலப்பரப்புகளில் தொலைதூரப் பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும், அவசர உதவிகளை விரைவாக கொண்டு செல்லவும் குதிரைகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
சட்டவிரோத குடியேறிகள் மீதான நடவடிக்கை காரணமாக, அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் மார்ச் மாதத்தில் பிடிபட்டவர்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.