நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில், 60 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையை இந்திய ராணுவம் அமைத்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு அவசர அறுவை சிகிச்சைகள், அத்தியாவசிய மருத்துவ சேவைகள் அங்கு அளிக்கப்படுவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.
இதுவரை 200 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.