Tuesday, April 8, 2025
HomeMain NewsOther Countryமியான்மர் நிலநடுக்கம் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

மியான்மர் நிலநடுக்கம் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

மியான்மிரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,085 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரான மண்டலே நகருக்கு அருகில் இதன் மையப் பகுதி காணப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சாலைகள், பாலங்கள் மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் சேதம் அடைந்தன.

பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் பலரின் உடல்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 3,085 ஆக உயர்ந்துள்ளதாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது. மேலும் 4,515 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் 341 பேரை காணவில்லை எனவும் அரசு கூறியுள்ளது.

இந்நிலையில், “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே உயிரிழப்பு இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது” என்று உள்ளூர் ஊடகம் தெரிவிக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments