Saturday, April 12, 2025
HomeCinemaதரமான சம்பவம் லோடிங்... குட் பேட் அக்லி டிரைலரில் இதை கவனித்தீர்களா..

தரமான சம்பவம் லோடிங்… குட் பேட் அக்லி டிரைலரில் இதை கவனித்தீர்களா..

நடிகர் அஜித் – இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் நேற்று இரவு 9 மணிக்கு வெளிவந்தது.

முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் படமாகவே இப்படத்தை ஆதிக் எடுத்துள்ளார். ஒத்த ரூபா தரேன் பாடலில் துவங்கிய இந்த டிரைலர், This Is My F**king Game என அஜித்தின் மங்காத்தா வசனத்தை வில்லன் அர்ஜுன் தாஸ் சொல்வது, அவன் பயத்துக்கே பயம் கற்றவேன், இருங்க பாய் போன்ற வசங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் ஜி.வி. பிரகாஷ் இந்த டிரைலருக்காக செய்திருந்த மிக்சிங் செம மாஸாக இருந்தது. கண்டிப்பாக முதல் நாள் திரையரங்கம் தெறிக்கப்போகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இந்த டிரைலரில் த்ரிஷா, பிரபு, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, சைன் டாம் சாக்கோ என அனைவரும் வந்தாலும், யாரும் எதிர்பார்க்காத விதமாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராஃப் எண்ட்ரி கொடுத்தார்

தமிழில் ஆரண்யா காண்டம், பிகில் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் டிரைலரின் இறுதியில் நடிகை சிம்ரனின் எண்ட்ரியும் சூப்பராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments