அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி பதிலடிகளால் அந்நாட்டின் மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ள முதல் 500 பேர் மட்டும், ஒரே நாளில் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர்.
மார்க் ஜுக்கர்பர்க், ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க் முதற்கொண்டு கிட்டத்தட்ட அமெரிக்காவின் முதல் 500 பெரும் பணக்காரர்கள் 17 லட்சத்து 77 ஆயிரம் கோடி ரூபாய் அளவு நஷ்டத்தை ஒரே நாளில் சந்தித்துள்ளனர்.
பல நாடுகளுக்கும் பதிலடி வரிகளை தீட்டிவிட்டு, தனது மார் அ லகோ ரிசார்ட்டுக்கு கோல்ஃப் விளையாட்டைக் காணச் சென்று விட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
‘வெள்ளிக்கிழமை வரப்போகிறது’ என வீக் எண்டைச் சுட்டிக்காட்டி ‘வீசும் தென்றலில் … பறக்கும் கோட்…. டையோடு… டிரம்பின் புகைப்படத்தை வெள்ளை மாளிகையின் எக்ஸ் தளம் வெளியிட்டது …
அதில், ‘அமெரிக்க பங்குச்சந்தையில் புயலே வீசி, பல பெரும் நிறுவனப் பங்குகளை கபளீகரம் செய்யும் போது டிரம்புக்கு மட்டும் தென்றலா?” என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
” நம்பள முடிச்சு விட்டீங் போங்ங்” என்ற பாணியில் ஓவர் நைட்டில் பிசினஸ் ரவுண்ட் டேபிளில் மீட்டிங்கைப் போட்டு கதறினராம் அமெரிக்காவின் முக்கிய CEO-க்கள்..
ஆப்பிள், நைக்கி, அடிடஸ், பேங்க் ஆப் அமெரிக்கா, போயிங், Fed Ex, Nvidia, மைக்ரோசாஃப்ட், கூகுள், போயிங், ஏர்பஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இழப்பைச் சந்தித்தன..
அமெரிக்க மக்களின் அன்றாட வாழ்வில் புழங்கக் கூடிய காஃபி, வாழைப்பழம், டாய்லட் பேப்பர், பாமாயில் உள்ளிட்ட விலையும் அதிகரிக்கும் என அந்நாட்டின் நுகர்வோர் சங்கங்கள் கூறியுள்ளன.
டிரம்பின் இந்த பதிலடி வரிவிதிப்புக்களால் பொருளாதாரத் தேக்க நிலை ஏற்பட்டு கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உலக வர்த்தகப் பொருளாதார இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிபர் டிரம்போ, 7 ட்ரில்லியன் டாலர் வரை அமெரிக்கப் பொருளாதாரம் ஏற்றம் காணும் என்கிறார்.
அத்துடன், டிரம்பின் பதிலடி வரி விதிப்பு உருவான முறையும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. நிபுணர்களைக் கொண்டு உருவாக்காமல், ChatGPT, Gemini, Claude மற்றும் Grok Ai இடமிருந்து சுட்ட திட்டம் த வெர்ஜ் நிறுவன செய்தியைக் காட்டி கமென்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்…
இதையடுத்து லிங்க்ட்-இன் துணை நிறுவனரும், ‘அடிப்படைக் கணக்கு கூட தெரியாத டீமைக் கொண்டு இந்த வரி விதிப்புக்களை மேற்கொண்டிருப்பதாக’க் குற்றம்சாட்டியுள்ளார்.
டிரம்பின் நடவடிக்கைகளால் அமெரிக்க பங்குச் சந்தைகளில் தற்காலிக தாக்கம் ஏற்பட்டாலும், உள்நாட்டில் உற்பத்தி அதிகரித்து, அங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பும், பொருளாதார நிலையும் மேம்படும் என டிரம்ப் தரப்பில் கூறப்படுகிறது.
எனினும், வரி விவகாரத்தில், உலக நாடுகளோடு பேரம் பேசத் தயாராக இருப்பதாகவும் கூறியதால், ‘இந்த நிலை மாறும்’ என அமெரிக்க சிஇஓக்களும், உலக வர்த்தக நிறுவனங்களும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் ….
இதேபோல் டிரம்பின் பதிலடி வரிகளால் இந்திய பங்குச் சந்தையும் ஒன்பதரை லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.