அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியாவில் உள்ள 150 ஆண்டு பழமையான உயிரியல் பூங்காவில், அழிந்துவரும் நிலையில் உயிரினங்கள் பட்டியலில் உள்ள மேற்கு சாண்டா க்ரூஸ் கலபகோஸ் ஆமைகள் முதன்முறையாக குஞ்சு பொறித்துள்ளன.
நூறு வயதான பெற்றோருக்கு பிறந்த குஞ்சுகளுக்கு கீரை உணவுகளைக் கொடுத்து பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
உயிரியல் பூங்காவுக்கு தாய் ஆமை வந்ததன் 93-ஆவது ஆண்டு தினமான ஏப்ரல் 23-ஆம் தேதி, பொதுமக்கள் பார்வைக்கு குஞ்சுகள் வைக்கப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.