பென்குயின்கள் மற்றும் நீர்நாய்கள் வாழும் இரு தீவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் தென்மேற்கே அமைந்துள்ள ஹியர்ட் மற்றும் மெக்டொனால்ட் தீவுகளுக்கே அமெரிக்க ஜனாதிபதி இந்த வரியினை விதித்துள்ளார்.
அமெரிக்க பொருட்கள் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு பரஸ்பர வரி விதிக்கப்படும் என அவர் அறிவித்ததின்படி, 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை வெளியிட்டார்.
இதன் போது மனிதர்களே வசிக்காத இரு தீவுகளுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்திருக்கிறார்.