வன்கூவர் தீவில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீ – 276 ஹெக்டேயர் பரப்பு நாசம்

கனடாவின் தெற்கு வன்கூவர் தீவு பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ, வறண்ட வானிலை மற்றும் செங்குத்தான மலைப்பகுதி காரணமாக வியாழக்கிழமையும் கட்டுப்பாட்டின்றி தொடர்ந்து எரிந்து வருகிறது.

தீயைக் கட்டுப்படுத்த பல தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்

சூக் நகருக்கு வடக்கே உள்ள மவுண்ட் ஜேக் பகுதியில் செப்டம்பர் 20 அன்று முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த காட்டுத்தீ, தற்போது 276 ஹெக்டேர் பரப்பளவிற்கு பரவியுள்ளது.

தீயிலிருந்து வெளிப்படும் அடர்ந்த புகையால் பிரிட்டிஷ் கொலம்பியாவின் தலைநகரப் பகுதி சூழப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட குறைந்த பார்வைத் திறன் காரணமாக, விமானப் படை மூலமாகத் தீயணைக்கும் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அடர்ந்த புகை காரணமாக ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் தெளிக்கும் பணி தடைபட்ட இடங்களில், புதன்கிழமை தீ மேலும் பரவியதாக பி.சி. காட்டுத்தீ தடுப்புச் சேவை தெரிவித்துள்ளது.

அத்துடன் பலத்த காற்று வீசியதால் தீ கிழக்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது. வியாழக்கிழமை அப்பகுதியில் குளிர்ந்த வானிலையும் லேசான மழையும் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்குச் சாதகமாக அமையும் என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தற்போது சுமார் 60 பணியாளர்கள் மவுண்ட் ஜேக் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து காட்டுத்தீ தடுப்புச் சேவை வெளியிட்ட அறிக்கையில்: “நாங்கள் தரைப்படை வீரர்கள், கனரக இயந்திரங்கள் மற்றும் விமான வளங்களைப் பயன்படுத்தித் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தீயின் வேகம், சுற்றுச்சூழல் நிலைமைகள் மற்றும் மீட்புப் படையினரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நேரடி மற்றும் மறைமுகக் கட்டுப்பாட்டு முறைகளை இணைந்து பயன்படுத்தி வருகிறோம். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவினரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அப்பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.” இந்த காட்டுத்தீ மனிதர்களின் செயல்பாடுகளால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles