ஐபிஎல் வந்தாலே ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களுக்கும் கொண்டாட்டம் தான். போட்டிகளை நேரில் காண பல பிரபலங்களும் வருவது வழக்கம். அங்கு எடுக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இணையத்தில் வைரல் ஆக்குவார்கள்.
நேற்று நடந்த சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியை காண பல சின்னத்திரை பிரபலங்களும் வந்திருந்தார்கள். விஜய் டிவி காமெடியன் சரத், பிக் பாஸ் விஷ்ணு, சவுந்தர்யா உள்ளிட்ட பலர் ஸ்டேடியத்திற்கு வந்திருந்தனர்.
சென்னை அணி மோசமாக விளையாடிய நிலையில் இந்த போட்டியிலும் தோற்றது. இதை பார்த்து விஷ்ணு தலையில் துண்டு போட்டு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
நீங்களே பாருங்க..