Saturday, April 12, 2025
HomeGossipsஒரு முட்டைக்காக இப்படியா அடிப்பது! கொந்தளித்த அறந்தாங்கி நிஷா

ஒரு முட்டைக்காக இப்படியா அடிப்பது! கொந்தளித்த அறந்தாங்கி நிஷா

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு பள்ளியில் முட்டை கேட்ட மாணவனை துடைப்பத்தால் சத்துணவு பெண் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்தனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஊர் பெயரை கொண்ட நடிகை கடுமையாக விமர்சித்து சமூகவலைதளத்தில் வீடியோ வேெளியிட்டிருக்கிறார்.

சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக படத்தில் ஹீரோ பொங்கி எழுந்து தட்டி கேட்பார். ஆனால், நிஜ வாழ்வில் அதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலும் கண்டுகொள்வது கிடையாது. ஆனால், ஒரு சில துணை நடிகர்கள், துணை நடிகைகள் தொலைக்காட்சி நடிகர்கள் பலரும் சமூகத்தில் நடக்கும் அநீதிக்கு குரல் கொடுப்பது உண்டு. அதேபோன்ற சம்பவம் தான் திருவண்ணாமலையில் அரங்கேறியிருக்கிறது.ஒரு 5ஆம் வகுப்பு மாணவன் முட்டை கேட்டதற்காக, அங்கு பணியாற்று சத்துணவு பெண் ஊழியர் அந்த சிறுவனை துடைப்பத்தால் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடுமையாக கண்டனங்களை பதிவு செய்தனர். பின்னர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாதிட்டனர்.

அந்த பள்ளியில் பணியாற்றும் பெண்கள் முட்டையை மறைத்து வெளியில் கடைகளுக்கு விற்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், மாணவன் முட்டை கேட்டபோது இல்லை என தெரிவித்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் மறைத்து வைத்திருந்த முட்டையை மாணவன் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளான். இதற்கு கோபமடைந்த பெண் அந்த மாணவனை தாக்கியுள்ளார். ஆசிரியர்களுக்கு இல்லாத உரிமை எப்படி பணிப்பெண்ணிற்கு வந்தது என நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகினறனர்.

இந்நிலையில், இச்சம்பவம் கொடுமையானது என்று அறந்தாங்கி நிஷா கொந்தளித்திருக்கிறார். இந்த வீடியோவை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்த அவர், “ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி சத்துணவு முட்டை கேட்டதற்கு 5 ம் வகுப்பு மாணவன் சமையல் செய்பவர்களால் தக்கப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. ஆசிரியர்கள் அடிப்பது மாணவன் நல்வழிக்காக, இவர்கள் எப்படி மாணவன் மீது கைவைக்க முடியும், யார் கொடுத்த உரிமை, மரியாதைக்குரிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பணி நீக்கம் மட்டும் அல்ல உரிய தண்டனை வழங்க வேண்டும்” என கோரியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் அறந்தாங்கி நிஷா. ஆனால், தான் உண்டு தன் வேலையுண்டு என்று இல்லாமல் இது போன்று சமூகத்தில் நடக்கும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வருவதை நெட்டிசன்களும் வரவேற்கின்றனர். மற்றவரை போன்று நீங்கள் இல்லை என்றும் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது தனது குடும்பத்தோடு வந்து மக்களுக்கு உணவுகளை வழங்கி உதவி செய்தவர் நிஷா. இதேபோன்று மற்றவரையும் உதவி செய்ய வீடியோ மூலம் பதிவிட்டார். மேலும், அறந்தாங்கி நிஷா சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட போது, அப்படி அழைக்க வேண்டாம் என வேண்டுகோள் வைத்தார்.

காமெடியில் கலக்கி வந்தாலும் அவ்வப்போது இதுபோன்று குரல் கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார் அறந்தாங்கி நிஷா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் இவ்ர காமெடியில் கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments