Sunday, April 20, 2025
HomeMain NewsAmericaடிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments