ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இதில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி, அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் நிறைவில் 221 ஓட்டங்களை குவித்தது.
இந்த போட்டியில் தனது 2ஆவது ஓவரை பும்ரா வீசினார். அப்போது படித்தார் மற்றும் விராட் கோலி களத்தில் இருந்தனர்.
அந்த ஓவரில் படித்தார் தடுத்து ஆடும்பொழுது பும்ரா அந்த பந்தை எடுத்து மறுமுனையில் இருந்த விராட் கோலி பக்கம் அடிக்க முயற்சிப்பார்.
சுதாரித்து கொண்ட விராட் கோலி கீரிஸ் உள்ளே சென்று விடுவார். சிரித்தப்படி நடந்து வந்த பும்ராவிடம் விராட் கோலி என்னை ஆட்டமிழக்க செய்ய பார்க்கிறாயா என்பது போல சிரித்தபடி பேசி செல்வார்.
இது தொடர்பான காணொளி கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்த போட்டியில் மும்பை அணியின் துடுப்பாட்டத்தின் போது 12 ஆவது ஓவரில் சூர்யகுமார் யாதவ் தூக்கி அடித்த பந்தை யஷ் தயாள் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகிய இருவரும் பிடிக்க முயன்றனர்.
அப்போது இருவரும் மோதிக்கொண்டதால் பந்தை தவறவிட்டனர்.
இதனால் கடுப்பான விராட் கோலி தொப்பியை கீழே வீசி தனது கோவத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான காணொயியும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.