இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் வடக்கு வாரணாசியில் உள்ள லால்பூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் 29 ஆம் திகதி தனது தோழியை பார்க்க செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.
அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் இளம்பெண் கிடைக்கவில்லை. இதுகுறித்து கடந்த 4 ஆம் திகதி பொலிஸில் புகார் செய்தனர். இந்நிலையில் அன்றைய தினம் அந்த இளம்பெண் பாண்டேபூர் பகுதியில் போதையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் வீட்டுக்கு சென்ற நிலையில் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அவர் சம்பவத்தன்று தனது தோழியை பார்க்க சென்ற போது தமக்கு அறிமுகமான நண்பர் ஒருவரை சந்தித்துள்ளார். அவர் அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அவரை நடேசர் பகுதியில் விட்டு சென்றுள்ளார். அங்கு 5 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்று போதைப்பொருள் கொடுத்து கூட்டுபலாத்காரம் செய்துள்ளனர்.
தொடர்ந்து மறுநாள் 3 பேர் ஓட்டலுக்கு வந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் வேறு சிலர் அந்த பெண்ணுக்கு போதைப்பொருள் கலந்த நூடுல்சை கொடுத்துள்ளனர். இதில் அவர் மயங்கியதும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அப்பகுதியில் உள்ள காட்டில் விட்டு சென்றுள்ளனர்.
மறுநாள் போதை தெளிந்து அந்த பெண் தனது தோழி வீட்டுக்கு சென்றுள்ளார். போதைப்பொருள் தாக்கத்தால் தூங்கிய அவர் மறுநாள் தான் வீட்டுக்கு சென்று, தன்னை 7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் இதுகுறித்து பொலிஸில் புகார் செய்தனர். அதன்பேரில் பொலிஸார் விசாரணை நடத்தினர். கூட்டு பாலியல் வன்கொடுயைில் ஈடுபட்டவர்களில் 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என கூறப்படுகிறது. அவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.