தென் அமெரிக்க நாடான பெருவில் ஸ்பெயினின் காலனித்துவ ஆதிக்கத்தை எதிர்த்து போராடியதற்காக சிறை வைக்கப்பட்டு உயிரிழந்தவரின் அஸ்தி 240 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த நாட்டிற்கு எடுத்து வரப்பட்டது.
ஸ்பெயினுக்கு எதிராக போராடியதால் டூபக் அமரு-2, அவரது மனைவி மைக்கேலா பாஸ்டிடாஸ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நிலையில் அவரது 20 வயது மகன் ஃபெர்னாண்டோ 1798 ஆம் ஆண்டு மாட்ரிட்டில் சிறை வைக்கப்பட்டு உயிரிழந்தார்.
அவரது அஸ்தியை வழங்க வேண்டுமென கேட்டு வந்த நிலையில் தற்போது ஒப்படைக்கப்பட்ட அஸ்தியை பெரு நாட்டினர் பாரம்பரிய உடையணிந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.