ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் பிரிவின் பெலிகஸ்வெல்ல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 4ஆம் திகதி மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, இது தொடர்பில் ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதற்கமைய, நேற்று (09) பிற்பகல் குறித்த சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் 46 வயதுடைய திக்கெலே, பெலிகஸ்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.