இங்கிலாந்தில் முதல் வெற்றிகரமான கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிறந்த முதல் பெண் குழந்தைகுறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இங்கிலாந்தில் பிறந்த முதல் குழந்தை எனச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிரேஸ் டேவிட்சன் என்ற 36 வயதான பெண் பிறக்கும் போதே கருப்பை இல்லாமல் பிறந்துள்ளார்.
கிரேஸ் 2023 ஆம் ஆண்டில் தனது சகோதரியான ஏமியின் அறுவை சிகிச்சை ஊடாக கருப்பையைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் இது இங்கிலாந்தில் முதல் வெற்றிகரமான கருப்பை மாற்று அறுவை சிகிச்சையாக அமைந்தது.
அந்த அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், கிரேஸ் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
தனது கருப்பையை தானம் செய்த கிரேஸின் சகோதரியின் பெயரான ஆமி என கிரேஸ் குழந்தைக்குப் பெயரிட்டுள்ளார்.
குழந்தையின் இரண்டாவது பெயராக இஸபெல் எனக் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை குழுவின் தலைவராகச் செயற்பட்ட வைத்தியரின் பெயரை வைத்துள்ளார்.
இந்த அறுவை சிகிச்சைக்காக 30, 000 பவுண்ட் தொகை செலவாகியுள்ளதுடன் 30ற்கும் அதிகமான வைத்தியர்கள் குழு 17 மணித்தியாலங்கள் அறுவைசிகிச்சை செய்துள்ளனர்.