இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்ஷன் 82 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து 218 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
துடுப்பாட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஷிம்ரோன் ஹெட்மையர் (Shimron Hetmyer) 52 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.