நெய்வேலியில் பெண்ணைத் தாக்கி என்.எல்.சி சுரங்கத்துக்குள் வீசி கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
வேப்பங்குறிச்சியைச் சேர்ந்த பிரபாவதியைக் காணவில்லை என தேடி வந்த நிலையில், அவருடன் செல்போனில் பேசிவந்த சம்பத் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கணவரை இழந்த பிரபாவதிக்கும் சம்பத்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பிரபாவதி தன்னுடன் பேசுவதை நிறுத்திவிடவே, அவர் வேறு யாருடனோ உறவில் இருப்பதாகக் கூறி சண்டையிட்டு வந்த சம்பத் அவரைத் தாக்கி, என்.எல்.சி முதலாவது சுரங்கத்திலுள்ள 100 அடி ஆழ பள்ளத்தில் தள்ளிக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.