உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் முகேஷ் அம்பானி தன்னுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை கடந்த 2024 ஜூலை மாதம் பிரம்மாண்ட செலவில் நடத்தி முடித்தார்.
உலகமே திரும்பி பார்க்கும் வண்ணம் பல ஆயிரம் கோடி செலவில் ஆனந்த் அம்பானி – ராதிகா திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்பானி குடும்பம் பற்றி பல விஷயங்கள் கவனிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆனந்த் அம்பானி தன்னுடைய 30வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்நிலையில் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது மனைவி ராதிகா மெர்ச்சண்ட் நேற்று நடந்த ஐபிஎல் 2025ன் மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் போட்டியை காண வான்கடே மைதானத்திற்கு வந்திருந்தனர்.
அங்கு போட்டியை உற்சாகமாக ரசித்திருக்கிறார் ஆனந்த் அம்பானி மனைவி ராதிகா. மைதானத்தில் இருவரும் இருக்கும் புகைப்படமும், போட்டி முடிந்து பெரிய பாதுகாப்பு நிறைந்த கார்களுடன் வீடு திரும்பிய வீடியோவும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
https://x.com/TakeOneFilmy/status/1912981791574524211