Friday, May 2, 2025
HomeMain NewsOther Countryபுனிதர் பிரான்சிஸ் திருத்தந்தை உயிரிழந்தமைக்கான அதிகாரபூர்வ காரணம் அறிவிக்கப்பட்டது

புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தை உயிரிழந்தமைக்கான அதிகாரபூர்வ காரணம் அறிவிக்கப்பட்டது

புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தை அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக வத்திக்கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திருத்தந்தையின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் குறித்து முடிவு செய்ய, கர்தினால் மன்றம் இன்று (ஏப்ரல் 22) கூடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டம் வத்திக்கான் நகரில் உள்ள சினோட் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தின் அப்போஸ்தலிக்க மாளிகையின் மூன்றாவது மாடியில் அமைந்த திருத்தந்தையின் மாளிகை மற்றும் அவர் வசித்த காசா சாண்டா மார்ட்டாவின் இரண்டாவது மாடியில் உள்ள மாளிகை, பாரம்பரியப்படி முத்திரையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருத்தந்தையின் மறைவை அடுத்து, உலகம் முழுவதும் பல நாடுகள் துக்க காலத்தை அறிவித்துள்ளன.

இந்தியா : மூன்று நாள் துக்க காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா: ஏழு நாள் துக்க காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில்: ஒரு வார துக்க காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரியா: நேற்று மாலை நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் மணிகள் ஒலிக்கப்பட்டன, மேலும் அனைத்து தேவாலயங்களிலும் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டன.

பிரான்ஸ்: திருத்தந்தையின் நினைவாக நேற்று இரவு எய்ஃபிள் கோபுரத்தின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

திருத்தந்தையின் மறைவை அடுத்து, அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் கெவின் ஃபாரல், வத்திக்கானின் இடைக்கால பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் பல கிறிஸ்தவ இல்லங்களில் திருத்தந்தையின் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments