அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் முன்னர் ஒருபோதும் இல்லாதவகையில் உயர்கல்வியில் தலையிடுவதை அமெரிக்க பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தலைவர்கள் கூட்டாக கண்டித்துள்ளனர்.
பல்கலைகழகங்கள் கல்லூரிகளின் அமெரிக்க சங்கமே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நாங்கள் ஒருகுரலில் பேசுகின்றோம் டிரம்ப் நிர்வாகத்துடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளிற்காக அழைப்பு விடுக்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் ஆக்கபூர்வமான சீர்திருத்தங்களை ஏற்க தயாராகயிருக்கின்றோம்,நியாயபூர்வமான அரசாங்கத்தின் கண்காணிப்புகளை எதிர்க்கவில்லை என தெரிவித்துள்ள அமெரிக்க பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தலைவர்கள் இருப்பினும் எங்களின் கல்லூரிகளில் கற்பவர்கள்,வாழ்பவர்கள் பணியாற்றுபவர்கள் மீதான அரசாங்கத்தின் தேவையற்ற தலையீட்டினை எதிர்க்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.
இது அமெரிக்க கல்விநிறுவனங்கள் தங்களின் சுதந்திரத்தை மீறும் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஒன்றிணைக்கின்றன என்பதை வெளிப்படுத்துகின்றது என கார்டியன் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஹவார்ட் பல்கலைகழகம் கல்வி தொடர்பான முடிவெடுப்பதை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு டிரம்ப் நிர்வகாம் முயல்வதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளது