நடிகை சானியா ஐயப்பன், தமிழில் இப்போதுதான் மெல்ல மெல்ல காலடி எடுத்து வைக்கிறார் என்றாலும் இவருக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கூறலாம். காரணம் இவர் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார் என்பதுதான் , மேலும் நடிகைக்கு 23 வயதே ஆவதால் இவரை பலரும் கவனித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் இவர் கடந்த 20ஆம் தேதி தனது 23வது பிறந்த நாளை தனது நண்பர்களுடன் கொண்டாடினார். அப்போது அவர் அணிந்திருந்த உடை மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகை சானியா ஐயப்பன், தனது சிறு வயதில் இருந்தே, சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஷார்ட் ஃபிலிம்ஸ், வெப் சீரிஸ் என தன்னை நோக்கி வந்த வாய்ப்புகளில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனாலோ என்னவோ, நடிகை சானியா ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் மிகவும் கவனம் பெறும் கதா பாத்திரங்களாக உள்ளது. அண்மையில் இவர் நடித்த லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் ரிலீஸ் ஆகி வசூலில் இமாலய சாதனை படைத்துள்ளது.
லுசிஃபர் படத்தில் சானியா ஐயப்பன் நடித்ததற்காக அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது சைமாவால் வழங்கப்பட்டது. அதேபோல் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் குயின் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடித்ததற்காக, சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுகளை வாங்கிக் குவித்தார். குறிப்பாக சைமா விருதுகள் மற்றும் ஃபிலிம் ஃபேர் விருதுகள் அவருக்கு அறிமுக நடிகைக்கான விருதுகள் கொடுக்கப்பட்டது. சானியா ஐயப்பன்: தெளிவான கதைத்தேர்வு திறன் கொண்ட நடிகை சானியா, ஐய்யப்பன் தமிழில் இதுவரை இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இறுகப்பற்று மற்றும் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான சொர்க்கவாசல். இந்த இரண்டு படங்களிலும் அவர் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்கள். இறுகப்பற்று படம் இப்போதும் ஃபீல் குட் அனுபவத்தைக் கொடுக்க கூடிய ரிப்பீட் ஆடியன்ஸை கொண்டுள்ள படமாக உள்ளது.
சானியா ஐயப்பன் கடந்த 20ஆம் தேதி தனியார் ரிசார்ட்டில் தனது நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இது இவரது 23 வது பிறந்த நாள். மிகவும் நெருக்கமான நண்பர்களுடன் மட்டும் இணைந்து இந்த பிறந்த நாளை சானியா ஐயப்பன் கொண்டாடியுள்ளார். தனது பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.