ஸ்ரீ தலதா வழிபாட்டுக்கு வருகை தரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இராணுவம் உட்பட பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (23) காலை கூடிய ஸ்ரீ தலதா வழிபாட்டு குழு இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று பிற்பகல் நிலவரப்படி, சுமார் 250,000 யாத்ரீகர்கள் புனித தந்த தாதுவை வழிபட சென்றுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், யாத்ரீகர்களின் வழிநடத்தலை பொலிஸார் மாத்திரமே கையாள முடியாது என்பதால், இராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படைகளின் உதவியைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.