அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படம் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
வெறித்தனமான மாஸ் காட்சிகள், ரெட்ரோ பாடல்கள், அஜித்தின் ரெஃபரென்ஸ் என தரமான சம்பவம் செய்திருந்தார் ஆதிக்.
இது ஒரு புறம் இருக்க, அஜித் குமார் மிக தீவிரமாக கார் ரேஸில் கடந்த பல மாதங்களாக ஈடுபட்டு வருகிறார். துபாய், இத்தாலியில் நடந்த ரேஸ்களில் அஜித்தின் டீம் மூன்றாம் இடம் பிடித்து இருந்தது.
அதை தொடர்ந்து, தற்போது பெல்ஜியம் நாட்டில் Spa Francorchamps சர்கியூட்டில் நடத்த ரேஸில் அஜித் டீம் பங்கேற்று இருக்கிறது. இந்த ரேஸில் அஜித்தின் டீம் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், வெற்றி கோப்பையுடன் அஜித் நிற்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி பகிர்ந்துள்ளது. தற்போது இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.