இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாப் பயணிகள்மீது பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலங்கை தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பில் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்தியாவில் இடம்பெற்ற கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகப் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை எப்போதும் இந்திய மக்களுடன் ஒற்றுமையாக நிற்கும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.