ரஷ்யா – யுக்ரேன் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.
குறித்த போர் நிறுத்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறவிருந்த நிலையிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ உட்பட பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொள்ளத் தீர்மானித்திருந்தனர்.
ஆனால், திட்டமிடல் பிரச்சினை காரணமாகப் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோவினால் கலந்துகொள்ள முடியவில்லை என அமெரிக்க வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து குறித்த போர்நிறுத்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.