Thursday, May 1, 2025
HomeCinemaபாதியில் நிறுத்தப்பட்டதா மூக்குத்தி அம்மன் - சுந்தர் c விளக்கம்

பாதியில் நிறுத்தப்பட்டதா மூக்குத்தி அம்மன் – சுந்தர் c விளக்கம்

நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய ஹிட்டாக தற்போது 2ம் பாகம் தயாராகி வருகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க துனியா விஜய், ரெஜினா கஸண்ட்ரா, யோகி பாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக போடப்பட்டு படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது.

படப்பிடிப்பில் நயன்தாராவிற்கும், இயக்குனர் சுந்தர்.சிக்கும் இடையில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என செய்திகள் வந்தன.

இந்த விஷயம் குறித்து சமீபத்தில் இயக்குனர் சுந்தர்.சியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், எனக்கும் நயன்தாராவிற்கும் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த செய்த ஏன் பரவியது என தெரியவில்லை.

நயன்தாரா ரொம்ப Dedicate ஆன நடிகை, படப்பிடிப்பில் ஒரு அரை மணி நேரம் கேப் இருந்தால் தான் நான் அவரை கேரவன் போகச் சொல்வேன். ஆனால் லொகேஷனில் இருப்பது தான் அவரது பழக்கம்.

இந்த மாதிரி வெளியாகும் எல்லா கிசுகிசுக்களுக்கும் நான் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது என கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments